Headlines
Admin-message

அமெரிக்காவுடன் வர்த்தக உறவை பலப்படுத்தும் இலங்கை! புதிய அதிகாரி நியமனம்

Published by Shaila on  | 

அமெரிக்காவுடன் உறவுகளை பலப்படுத்தும் வகையில் அதற்காக புதிய அலுவலர் ஒருவரை இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது.

இந்த நியமனத்தை வாசிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான தூதுவர் பிரசாத் காரியவசம், வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் (Illinois) இல்லினொய்ஸில் அமைந்துள்ள தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் வகையில் இந்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய நியமனத்தை பெற்றுள்ள ரொனால்ட் ஜேம்ஸ் சொரினி என்ற இந்த அதிகாரி, அமெரிக்க வர்த்தக திணைக்கள அலுவலகத்தில் பல ஆண்டுகள் அனுபவத்தை கொண்டுள்ளார்.

1989ம் ஆண்டு இவர், அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ் நிர்வாகத்தினால், செனட் சபையின் வர்த்தகத்துறை பிரதானியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லினொய்ஸ் பிராந்தியம் இலங்கையர்களை அதிகமாக கொண்ட இடம் என்பதும் பல முன்னணி நிறுவனங்களை கொண்ட பிராந்தியமுமாகும்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top