Headlines
Admin-message

அரநாயக்க செல்லும் அமெரிக்க தூதுவர்

Published by Shaila on  | 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட கேகாலை அரநாயக்க பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்ய உள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால், அமெரிக்கா அரசின் உதவியுடன் நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனர்.

அரநாயக்க பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளன.அமெரிக்க தூதுவர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அமெரிக்க தூதுவருடன் அனர்த்த ஆபத்துக்களை குறைப்பது தொடர்பான தெற்காசிய பிராந்தியத்திற்கான ஆலோசகர் மைக்கல் ஜே. ஆர்னஸ்ட் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top