இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 206 ரக ஹெலிகொப்டர் ஒன்று ஹிங்குரங்கொடை விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயிற்சிகள் நிறைவு பெற்று தரையிறக்க முயற்சித்த வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

