Headlines
Admin-message

ஐ.தே.கட்சியுடன் இணையும் ஜனநாயகக் கட்சி

Published by Shaila on  | 

இலங்கையின் பெரிய லிபரல் ஜனாநாயக கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெனியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த பின்னர், பொன்சேகா உட்பட ஜனநாயகக் கட்சியினர், ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயகக் கட்சியில் அங்கத்துவத்தை பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த பேச்சுவார்த்தை வெற்றிப்பெற்றால், அத்தநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சில தரப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலருடன் இணைந்து மேற்கொண்டு வரும் சூழ்ச்சியை முறியடிக்கும் நோக்கில், ஜனநாயகக் கட்சி இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top