தங்கொடுவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தரால் பௌத்த பிக்கு தாக்கப்பட்ட நிலையில் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (24) நள்ளிரவு 12.30 மணியளயவில் இடம்பெற்றுள்ளது.
தங்கொடுவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கடந்த 24ம் திகதி இரவு தமது கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளை சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
இவரை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை, அங்கு வந்த பௌத்த பிக்கு அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் தனது கையில் இருந்த தலைக் கவசத்தால் பிக்குவைத் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

