முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பகிரங்க அரசியலுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
விமுக்தியை பகிரங்க அரசியலுக்கு கொண்டு வந்து, அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால தலைவராக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமுக்தியை அரசியலுக்கு கொண்டு வரும் பிரதான பங்கை அமைச்சர் டிலான் பெரேரா வகித்து வருவதுடன், அவர் உரையாற்றும் கூட்டங்களில் விமுக்தி குமாரதுங்க குறித்து பேசி வருகிறார்.
முன்னாள் ஜனாதிபதியின் மகனை அரசியலுக்கு கொண்டு முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த உயர்மட்ட தரப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

