Headlines
Admin-message

யோஷித ராஜபக்ஷ மோசடியான வழிகளில் சுமார் 14 இடங்களில் காணிக் கொள்வனவு

Published by Unknown on  | 



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ மோசடியான வழிகளில் சுமார் 14 இடங்களில் காணிகளைக் கொள்வனவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தியின் பெயர் பதிக்கப்பட்ட தெஹிவளை இல்லம் சில வாரங்களுக்கு முன்னர் பொலிசாரினால் சோதனையிடப்பட்டது.
அதன் போது வீட்டின் உரிமையாளர் யோஷித்த ராஜபக்ஷ என்பதையும், அவர் தனது பாட்டியொருவரின் பெயரில் அதனைக் கொள்வனவு செய்திருப்பதையும் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் கண்டறிந்திருந்தனர்.
இது தொடர்பாக கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் யோஷித்தவின் பாட்டியை பொலிஸ் நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து யோஷித்த ராஜபக்ஷ தனது பாட்டியாக கூறிக் கொள்ளும் டேசி பொரஸ் என்ற பெண்மணியை இன்று பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் விசாரணைகளுக்கு அழைத்துப் போயுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைளில் சுமார் பதினான்கு இடங்களில் அவர் அண்மைக்காலங்களில் காணிகளைக் கொள்வனவு செய்திருக்கும் விடயம் வெளிப்பட்டுள்ளது.
அவை அனைத்தும் அவரது பெயரில் யோஷித்த ராஜபக்ஷ முறைகேடான வகையில் கொள்வனவு செய்த காணிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top