Headlines
Admin-message

கிணற்றுக்குள் உருண்டு விழுந்த உழவு இயந்திரம்! மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

Published by Unknown on  | 




கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் உழவு இயந்திரம் உழுது கொண்டிருந்த போது, உருண்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதன் போது சாரதி சாதுரியமாக மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
திங்கள் கிழமை காலை ஒன்பது மணியளவில் மலையாளபுரம் வடக்கில் காணியொன்றை உழுதுகொண்டிருந்த போது பின்புறமாக உழவு இயந்திரம் உருண்டு 30 அடி கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது.

ஐந்துக்கு மேற்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பல மணித்தியாலயங்கள் நீர் இறைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி அறிவியல்நகர் பொறியில் பீடத்திலிருந்து பாரம்தூக்கி கொண்டு வரப்பட்டு உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top