Headlines
Admin-message

மனித உரிமைகள் நிலைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம்.

Published by Unknown on  | 



இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை, ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ-7 மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ள நிலையில், அது குறித்து ஜனாதிபதிக்கும் ஜப்பானியப் பிரதமரின் விசேட பிரதிநிதி ஹிரோட்டோ இசுமிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது, மனித உரிமைகள் நிலைமை, ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளதுடன், ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்காக, ஜப்பானியப் பிரதமரின் விசேட பிரதிநிதி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததாகவும், ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளைஇலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பலப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, ஜப்பான் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் ஜப்பானிய பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top