சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிணற்று நீர் அசுத்தமடைந்திருக்கலாம் என நம்பப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்வள முகாமைத்துவ அதிகாரசபை இந்தக் எச்சரிக்கையினை பொதுமக்களிடம் விடுத்துள்ளது.
மேலும் குறித்த குழாய் கிணற்று நீர் பரிசோதனை அறிக்கை வெளியிடும் வரை இதை பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளது.
மேலும் குழாய் நீர் பரிசோதனை அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்காக 071-8587628,0776528445,071-8605592,071-14414681 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என இந்த அதிகாரசபையின் தலைவர் எஸ்.காதர் தெரிவித்துள்ளார்.

