வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு பிரதேசங்களில் மாற்றுக் காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பிரகாரம் கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
காணிப் பதிவாளர் நாயகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏராளமான இடங்கள் இதுவரை எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படவில்லை. அவ்வாறான இடங்களை அடையாளம் கண்டு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அவ்வாறு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு மாற்று இடங்களை பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் கிராம சேவை அதிகாரி மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

