மைத்திரி- ரணில் நல்லாட்சி அரசாங்கம் 2021ஆம் ஆண்டுவரையில் நீடிக்கும் என்று மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,
சோதிடத்தின்படி இது அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான ஒற்றுமை மிகவும் வலிமையுடன் இருக்கிறது.
எனவே யாராலும் அவர்களை இடையூறு செய்யமுடியவில்லை. இந்த நிலையிலேயே அரசாங்கத்தினால் பல மாற்றங்களை ஏற்படுத்தமுடிந்தது என்றும் நிலுக்கா குறிப்பிட்டுள்ளார்.

