Headlines
Admin-message

ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு திலங்கவிடம் அரசாங்கம் கோரிக்கை?

Published by tamilkurall on  | 


ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிடம் அரசாங்கம் கோரியுள்ளதாக ஞாயிறு பத்திரிகையொன்று முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொண்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்களை ஆதாரம் காட்டி அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கடந்த வாரம் திலங்க சுமதிபாலவிடம் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைமைப் பதவியிலிருந்து விலகுவது குறித்து திலங்க சுமதிபால இதுவரையில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
அவ்வாறு தீர்மானம் எடுத்தால் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவியிலிருந்து திலங்கவை நீக்குமாறு முன்னாள் இலங்கை அணித் தலைவரும் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top