Headlines
Admin-message

மட்டக்களப்பில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Published by tamilkurall on  | 


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளுடன் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிறைந்துரைச்னை முஹம்மதியா வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர்கள் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.அமீர் அலி தலைமையில் பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலும் பொலிஸாரினால் தேடுதல் வேட்டை நடாத்தப்பட்ட வேளை பிறைந்துரைச்சேனை அஸ்கர் பாடசாலை வீதியில் வைத்து குறித்த சந்தேக நபரை கைது செய்ததுடன் போதை மாத்திரைகளையும் அந்த மாத்திரைகள் மறைத்து வைத்திருந்த முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர் பிறைந்துரைச்னை முஹம்மதியா வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top