இந்த நிகழ்வு இன்று (18) சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியளவில் இருந்து இடம்பெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வை சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு, அக்கினிப் பறவைகள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வோருக்கென வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


