இன்றைய தினம் காலை இவ் வழக்கு தொடர்பான விசாரனை ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ் அறிக்கையை மன்றில் சமர்பித்திருந்தனர்.
மேலும் கடந்த வழக்கு தவனையின் போது சுவிஸ் குமார் தப்பிச் சென்றமை தொடர்பில் நீதிபதியால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விரிவானதும் தெளிவானதுமான விசாரனையை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார்.
இந்நிலையில் அது தொடர்பாக தாம் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தடயங்கள் தொடர்பான விசாரனை அறிக்கைகளையும் மன்றில் சமர்பிக்க நீதிவான் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு பணித்திருந்தார்.
அத்துடன் குறித்த மாணவியின் சடலத்திற்கு அண்மையில் இருந்து மீட்கப்பட்ட இரத்த கறை தொடர்பான அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் நீதிவான் தெரிவித்தார்.
மேலும் இவ் வழக்கு சந்தேகநபர்களை எதிர்வரும் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

