Headlines
Admin-message

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதான அதிகாரியின் சம்பளம் 40 லட்சம் ரூபா!

Published by tamilkurall on  | 


ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி 40 லட்சம் ரூபாவை சம்பளமாக பெறுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்பாக நடந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்களை கவனத்தில் கொள்ளும் போது ஒரு விமானத்திற்கு 333 என்ற அளவில் ஊழியர்கள் இருக்கின்றனர்.
அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்பனை செய்ய அடிப்படையை ஏற்படுத்தி வருகின்றது.
நிறுவனத்தின் நஷ்டத்தை மக்களுக்கு கொடுத்து விட்டு, நன்மையை முதலாளிமாருக்கு கொடுக்க முயற்சிக்கின்றனர்.
புல்லை மக்களுக்கு கொடுத்து விட்டு, பாலை கடத்தல்கார்களுக்கு கொடுப்பது போன்ற நடவடிக்கையாகும்.
விமானத்தில் பயணிக்கும் பயணி இந்த நஷ்டத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை.
பணத்தை கொள்ளையிட்டு, விமானத்தில் பயணித்தவர்களை அழைத்து பணத்தை அறவிட வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் திட்டம் கொள்ளையிடுவது. தற்போதைய அரசாங்கத்தின் திட்டம் விற்று தின்பது எனவும் சுனில் அந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top