அவிசாவளையில் நேற்று நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
ஒரு தரப்பு அர்ப்பணிப்பின் ஊடாக மட்டும் நல்லிணக்கத்தை நிலைநாட்டிவிட முடியாது. இரு தரப்பு அர்ப்பணிப்பு அவசியமானது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியமாகின்றது.
நாட்டின் கொள்கைகள் குறித்து நாடாளுமன்றிலேயே தீர்மானம் எடுக்க வேண்டும். மாகாணசபைகளுக்கு அதற்கான உரிமை கிடையாது.
அண்மையில் வடக்கில் சமஸ்டி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் மற்றும் அரசியல் அமைப்பு திருத்தங்களில் தாக்கம் செலுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1939ம் ஆண்டில் தமிழகத்தில் ராமசாமி நாயக்கர் தனித் தமிழ்நாட்டு கொள்கைகயை முன்னெடுத்தார். இந்தப் போராட்டத்தில் பின்னர் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி போன்றவர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.
1957ம் ஆண்டில் அண்ணா தலைமையில் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்டளவு வெற்றியீட்டிய போதிலும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. நேருவின் கட்சியே ஆட்சியை அமைத்தது.
1962ல் கருணாநிதி மீளவும் தேர்தலில் போட்டியிட்டார் எனினும் வெற்றியீட்ட முடியவில்லை.
எமது தலைவர்களைப் போன்று அல்லாது நேரு ஒர் கடுமையான தீர்மானத்தை எடுத்தார்.
தனிநாட்டு கோரிக்கையை முன்வைப்போர் தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவித்து, ஐக்கிய இந்தியாவை எதிர்ப்போரை கைது செய்தார்.
அதன் பின்னர் தனிநாட்டு கோரிக்கை கைவிடப்படும் என கருணாநிதி தரப்பினர் அறிவித்தனர். அதன் பின்னரே கருணாநிதி தரப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைப் படையினர் வெளிநாட்டு படைகளின் உதவியின்றி பயங்கரவாதத்தை இல்லாதொழித்தனர்.
இராணுவம் காணிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. பாதுகாப்பை நிலைநாட்டியதன் பின்னர் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் அபகரிக்கப்பட்ட சிங்கள முஸ்லிம்களின் காணிகளும் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.
கடும்போக்குவாதம், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தையே நாம் எதிர்க்கின்றோம்.
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட சர்வாதிகார குடும்ப ஆட்சி தற்போது இல்லை.
இன்று தேசப் பற்றாளர்கள் என மார் தட்டிக் கொள்ளும் எவரும் அன்று மாவிலாறுக்கு சென்று மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

