Headlines
Admin-message

கல்விச் சேவையில் பழிவாங்கல்களுக்கு உள்ளானோருக்கு பதவியுயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு

Published by tamilkurall on  | 


கல்வித்துறையில் கடந்த அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளானோருக்கு பதவி உயர்வுகள் வழங்கும் தீர்மானத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் உபதலைவர் ஆர்.எல். ஹந்தபான்கொட உள்ளிட்ட ஆறு பேர் இதனைத் தாக்கல் செய்துள்ளனர்.
பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 26 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளான நான்காயிரத்துக்கும் அதிகமான கல்விச் சேவை உத்தியோகத்தர்களுக்கு கல்வி நிர்வாக சேவையில் பதவி வழங்க அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை எதிர்த்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கல்வி அமைச்சில் மேற்கொள்ளப்படவிருந்த அரசியல் பதவி உயர்வுகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top