நாடாளுமன்றத்தில் இந்தக்கோரிக்கை இன்று விடுக்கப்பட்டது.
கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் கானல் நீராகவே இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்று கூறப்படுகின்ற நிலையில் இவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று செல்வம் கோரினார்.
இதேவேளை பதில் அதிபர்களை அதிபர்களாக நியமிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தரங்களை பெற்றிருக்காத போதும் பாடசாலைகளில் பதில் அதிபர்களாக கடமையாற்றியவர்கள் அதிபர் நியமனங்களின் போது புறக்கணிக்கப்படுகின்றமை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

