Headlines
Admin-message

கடற்றொழிலாளர்கள் அவதானம்; 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் நீடிப்பு

Published by tamilkurall on  | 


நாட்டின் கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று வீசும் என்றும், அது மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக கடற்படை மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில் 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று பிற்பகல் 2.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. 

பதுளை, மொனராகலை, கண்டி, இரத்தினபுரி, குருணாகல், நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top