Headlines
Admin-message

வடக்கு ஆளுநரை ஜனாதிபதி மீள பெற வேண்டும்! முன்னாள் எம்.பி.சிறிகாந்தா. வலியுறுத்து

Published by tamilkurall on  | 


வடமாகாண சபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் வடமா காணத்தைசுடுகாடாக பார்க்க நினைக்கிறார்கள் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கூறியிருக்கும் விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாது.

ஜனாதிபதியின் தெரிவில் வடமாகாணத்தில் இருக்கும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முதலமைச்சர் மற்றும் மாகாணசபையை விமர்சிக்கும் உரிமையற்றவர். என ரெலோஅமைப்பின் செயலாளர் நாயகமு ம் சட்டத்தரணியுமான சிறீகாந்தாகூறியுள்ளார்.
இன்றைய தினம் காலை யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன் றில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயேஅவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குறித்த சந்திப்பில் மேலும்அவர் குறிப்பிடுகையில்,
கொழும்பில் இட ம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த ஆளுநர் வடமா காணசபை தொடர்பாகவும், முதலமைச்ச ர்தொடர்பாகவும் விமர்சனங்களை கூறியுள்ளார்.
அதிகார பரவலாக்கல்முறையில் ஆளுநர் தெரிவு செய்யப்பட்டவரே தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. அவர் எவ்வாறான விமர்சனங்களையும் முன்வைக்கலாம்.
ஆனால் இந்தஆளுநர் ஆசனத்தில் இருந்து கொண்டு அவர் அந்த விமர்சனத்தைமுன்வைக்க முடியாது. முதலமைச்சர் மற்றும் மாகாணசபை என்பது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒன்று.
ஆளுநர் முதலமைச்சருடன் இணைந்து செயலாற்ற வேண்டுமே தவிரமுதலமைச்சர் மற்றும் மாகாணசபையை விமர்சித்துக்கொண்டிருக்க முடியாது.
எனவே ஆளுநர் தனது விமர்சனம் ஊடாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபை மற்றும் மு தலமைச்சர் ஆகியோரை மட்டுமல்ல வட மாகாணமக்களுக்கே அவர் முதுகில் குத்தியிருக்கின்றார்.
முதலமைச்சர், மற்றும் மாகாணசபையை ஊடகங்கள், அரசியல்வாதிகள் விமர்சிக்கலாம்அதில் தவறில்லை. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் அரசியலமைப்பை மீறிசெயற்பட முடியாது.
எனவே ஆளுநர் அரசியலமைப்பைமீறியுள்ளார். இந்த இடத்தில் வடமாகாண ஆளுநரை ஜனாதிபதி மீள பெற வேண்டும்.
இல்லையேல் அவரை வீட்டுக்கு அனுப்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாம்நிச்சயமாக எடுப்போம்.
இதனை நாங்கள் பகிரங்க அறிவிப்பாகவே விடுக்கவிரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top