Headlines
Admin-message

நினைவேந்தல் நிகழ்வு மே 18ல் முள்ளிவாய்க்காலில் நடைபெறும்!

Published by tamilkurall on  | 


வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுமே 18ல் முள்ளிவாய்க்காலில் நடைபெறும்.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கைத் தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள்.
சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதிநாள்.
தமிழரின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த நாள்.
இந்நாளை எமது தமிழ் மக்கள் இரத்த சரித்திரம் எழுதிய துக்க தினமாக வரலாறு உள்ளவரை அனுஷ்டிக்கவேண்டும்.
கடந்த 2015ம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்குமாக நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.
இம்முறையும் மேமாதம் 18ம் திகதி இவ்வாறான நிகழ்வை அனுஷ்டிப்பதற்கான ஒழுங்குகள் வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக மாகாண முதலமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
அவர்கள் மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மே 18ம் திகதி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களிலும் காலை 6.00 மணிமுதல் 9.00 மணி வரையான காலப்பகுதியில் யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
மேமாதம் 18ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப் பெரியார்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
இதன்போது யுத்தத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
விசேட நிகழ்வு 10.00 மணி வரை நடந்தாலும் மாலை 5.00 மணி வரை மேற்படி நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்வில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நன்மை கருதி. முல்லைத்தீவு பேரூந்து நிலையத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top