வவுனியா, கலாபோபஸ்வேவ, நந்திமிஸ்ரகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த 64 வயது முதியவர், ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார், சந்தேகத்தின் பேரில் வயோதிபரை கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

