குருணாகலில் போர் வெற்றி நிகழ்வை நடத்த தயாராகி வருவதாக தனக்கும் தகவல் கிடைத்துள்ளதாகவும் முப்படை பிரதானிகளின் அனுமதியின்றி எந்த இராணுவ அதிகாரிக்கும் அதில் கலந்து கொள்ள முடியாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசு என்ற வகையில் உத்தியோகபூர்வமாக நடத்தும் போர் வெற்றி நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவு தூபிக்கு அருகில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது.
மேலும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தெஹியோவிட்ட மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இராணுவத்தினரும், கொலன்னாவ பிரதேசத்திற்கு கடற்படையினரின் படகுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

