இராணுவ உத்தியோகத்தர் திஸ்ஸ என்பவர் 2013ம் ஆண்டு ஜூலை மாதம் ஒடேல் வாகன தரிப்பிடத்தில் வைத்து தமது மகனை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம் சுமத்தியுள்ளார். சீ.சீ.ரீ.வி காட்சிகளில் இந்த விடயம் பதிவாகியுள்ளதாகவும் எனினும் இந்தக் காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தின் சில உத்தியோகத்தர்கள் கோதபாயவின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட கடந்த அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமது அமைப்பு அழுத்தம் பிரயோகிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த தரப்பினர் தம்மை படுகொலை செய்ய முயற்சித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

