Headlines
Admin-message

இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவு

Published by tamilkurall on  | 


இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதற்கமைய யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களும், வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 மீனவர்களுமே விடுதலை செய்யப்பட உள்ளனர் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜ் தெரிவித்துள்ளார்.
இதன்படி மீனவர்கள் நாளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்படவுள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா சென்றிருந்த போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் போசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top