ஊழல் மோசடிகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற பாரதூரமான குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச் செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் ஆறு நிறுவனங்களிடம் சுமார் 512 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அநேகமான விசாரணைகள் மிகவும் மெதுவான கதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், பல விசாரணைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தை தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் அடுத்த கட்டத்தை அடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

