Headlines
Admin-message

பெண்களிடம் தொடர்ந்து சங்கிலி அறுத்து வந்த இருவர் கைது

Published by tamilkurall on  | 


வவுனியாவில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த சங்கிலி அறுப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தனிமையில் செல்லும் பெண்களை இடைமறித்து வீட்டு விலாசம் கேட்பது போல் பாசாங்கு செய்துவிட்டு அவர்கள் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவங்கள் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த வவுனியா குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த குழுவினரே இச்சம்பவங்களுடன் தொடர்புடைய வவுனியா வைரவ புளியங்குளம் மற்றும் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து கடந்த வருடம் செப்ரெம்பர் 14ம் திகதி வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் வைத்து வீதியில் சென்ற பெண்ணிடம் அறுக்கப்பட்ட சங்கிலி மற்றும் கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி வவுனியா, சாந்தசோலை சந்தியில் கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட சங்கிலி என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top