ரோசி சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை மனித உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
தேர்தலில் விருப்பு வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் எந்த குளறுபடிகளும்இன்றி மேற்கொள்ளப்பட்டதுடன் அதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் சட்டமா அதிபரினால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான ஆவணங்களையும் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
இந்த ஆவணங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரோசிசேனாநாயக்க 12ம் இடத்தை பெற்றார்.
எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட 11 பேரே நாடாளுமன்றத்தில் தெரிவாகினர்.

