Headlines
Admin-message

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Published by tamilkurall on  | 


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க அவர், ஒரு வார காலத்திற்கு சிங்கப்பூர் செல்வதற்கான அனுமதியை நீதவான் வழங்கியுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 2010ல் இருந்து 2014 வரையான காலப்பகுதியில் முறைகேடாக சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குகளின் அடிப்படையில் இவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தது.
இந்நிலையில் தன்னுடைய மனைவிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் மே 20 முதல் 25 வரையில் கடவுச்சீட்டை கையளிக்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையினை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், மே 20 முதல் 27 வரையான காலப்பகுதி மட்டும் கடவுச்சீட்டை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top