கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த விடுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்களில் 21 வயதுடைய இளம் பெண்ணொருவரும் மற்றவர்கள் அனைவரும் 40 வயதுடையோர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் சில பெண்கள் தங்களது குழந்தைகளையும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்களின் கணவன்மார் மீனவர்கள் எனவும் மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்களில் இருவர் இதற்கு முன்பும் சூதாட்டத்தில் ஈடுபட்டதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 20 ஆயிரம் ரூபா பணத்திற்கான சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை நடாத்தி வருகின்றனர்.

