Headlines
Admin-message

மக்களின் எதிர்ப்பை சமாளிக்க போலியாக நடிக்கும் ஜனாதிபதி: கே.டி.லால்காந்த

Published by tamilkurall on  | 


ரணில் - மைத்திரி ஒன்றாக இணைந்து தீர்மானங்களை எடுத்தாலும் அந்த தீர்மானங்களுக்கு மக்களின் எதிர்ப்பு ஏற்படும் போது அதனை சமாளிக்க ஜனாதிபதி போலியான நடிப்பை அரங்கேற்றுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதனால், ஜனாதிபதி தற்போது கல்லில் மலம் கழித்த பூனையின் நிலைமைக்கு சென்றுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பாக தற்போது அடிப்படையான அரசியல் பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.
மத்திய வங்கியின் திறைசேரி முறிப்பத்திர மோசடி இதற்கு முன்னர் பெரிதாக பேசப்பட்டது. இதனை அரசாங்கத்தின் பெரிய மோசடி எனக் கூறினர்.
ரணில் விக்ரமசிங்க ஊழல்வாதி இல்லை என்கின்றனர். ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் சகாக்கள் இதற்கு முன்னர் மக்களுக்கு விநியோகிக்க கொண்டு வந்த கூரை தகடுகளை கூட கொள்ளையிட்டனர்.
இதற்கு எதிராக ரணில் விக்ரமசிங்க அன்று எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதேபோல மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய வங்கியின் மோசடி தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி அரசியல் ரீதியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க அழைப்பை வெளியிட்டு, மத்திய வங்கியின் ஆளுநரை நீக்குமாறு பிரதமருக்கு கூறினார்.
ஆனால், பிரதமர் மத்திய வங்கியின் ஆளுநரை நீக்கவில்லை.
எனினும் மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஆளுநரின் பதவிக்காலத்தை நீடிக்காது அவரை விலக்கி விட்டு, தகுதியானவரை அந்த பதவியில் நியமிக்க ஜனாதிபதிக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.
இந்த நிலையில், அவரது தீர்மானத்திற்கு அமைய ஊழல்,மோசடி மற்றும் திருட்டை ஒழிக்க ஜனாதிபதிக்கு உண்மையான அக்கறை இருக்கின்றதா என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும் எனவும் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top