Headlines
Admin-message

உடன்படிக்கை மூலமாக உதயங்கவை கைதுசெய்ய நடவடிக்கை

Published by tamilkurall on  | 


உக்ரெய்னுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் கீழ் ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
உக்ரெய்னுடன் விரைவில் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் கீழ் உதயங்கவை நாடு கடத்துமாறு பொலிஸார் உக்ரெய்ன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க முடியும்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக வீரதுங்க, இலங்கையினால் தேடப்படும் ஒருவராக கருதப்படுகிறார்.
உக்ரெய்ன் தீவிரவாதிகளுடன் ஆயுதப் பரிமாறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டும் இதில் ஒன்றாகும்
இதனையடுத்தே அவர் விசாரணைகளுக்கு அஞ்சி இலங்கைக்கு வர மறுத்து வருகிறார். இந்தநிலையில் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக உக்ரெய்னுடன் உடன்படிக்கையை செய்து கொள்ள கடந்த வாரம் அமைச்சரவை நீதியமைச்சுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top