Headlines
Admin-message

பிறந்த நாளே இறந்த நாளான கொடூரம்: தாய் கைது

Published by tamilkurall on  | 


கிளிநொச்சி - தர்மபுரம் - புளியம்பொக்கண பகுதியில் சிசுவொன்றை நீரோடையில் வீசிய சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் அதிக இரத்தப் போக்கு காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குழந்தை இறந்து பிறந்தமையால் நீரோடையில் வீசியதாக விசாரணைகளின் போது குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top