இதை இந்திய மகளிர் கால்பந்து அணியின் தலைவியாக இருந்த சோனா சௌத்தரி தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.
2002ஆம் ஆண்டு கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தான் எழுதிய “கேம் இன் கேம்” என்ற சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்திய கால்பந்து வீராங்கனைகளின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் பயிற்சியாளர்கள், நிர்வாகிகளால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
வேறிடங்களுக்கு விளையாட சென்றால் பயிற்சியாளர்களும், நிர்வாகிகளும் வீராங்கனைகளின் அறைகளிலேயே தங்குவர்.
இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்களின் தொல்லைகளில் இருந்து தப்ப வீராங்கனைகள் நெருங்கிய தோழிகள் போல் நடித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

