Headlines
Admin-message

எமது வியாபாரத்தை கடற்படையினர் கைப்பற்றினர்! அவன்ட் கார்ட் தலைவர் குற்றச்சாட்டு

Published by tamilkurall on  | 



தமது வியாபாரத்தை கடற்படையினர் கைப்பற்றிக் கொண்டதாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

நைஜிரிய கடற்படையினருடன் தாம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை கடற்படையினர் அபகரித்துக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நைஜீரியாவிற்கு இலங்கைக் கடற்படையினர் ரோந்துப் படகுகளை விற்பனை செய்திருந்தனர்.

26 நாடுகளுடன் போட்டியிட்டு இந்த வர்த்தக உடன்படிக்கையை பெற்று;ககொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

நைஜிரீய கடற் படையினருடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை காண்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமக்குச் சொந்தமான வர்த்தகம் ஒன்றை கடற்படையினர் அபகரித்துக்கொண்டுள்ளதாக அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் செய்ய வேண்டிய அவசியம் கடற்படையினருக்கு கிடையாது என கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்னதாக நைஜீரிய கடற்படையினருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top