Headlines
Admin-message

மோடி மற்றும் சம்பந்தன் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு

Published by tamilkurall on  | 


இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை, பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு சென்றார்.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோரை இந்திய பிரதமர் அழைத்துள்ளமை இருதரப்பிற்குள்ள நல்லுறவை வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top