Headlines
Admin-message

இலங்கையில் முன்னேற்றம் கண்டுள்ள சட்டத்துறை!

Published by tamilkurall on  | 


தொழிலாளர்கள் நியாயசபையில் உள்ள மாற்றங்களும் சர்வதேச தொழிலாளர்களின் நிலையும் என்னும் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சட்டத்துறை இன்று பலராலும் வரவேற்கும் விதத்தில் காணப்படுகின்றது என்று பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் ஊடாக கடந்த மூன்று மாதங்களுக்குள் 300 வழக்குகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஜெட்வின் ஹோட்டலில் தொழில் உறவுகள் அமைச்சின் பிரதி செயலாளர் சுனில் அபயவர்த்தன தலைமையில் தொழிலாளர்கள் நியாயசபையில் உள்ள மாற்றங்களும் சர்வதேச தொழிலாளர்களின் நிலையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் வழக்குகளை துரிதமாக நிறைவு செய்வதற்கான பல கட்ட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இப்போதுள்ள கால கட்டத்தில் பெருந்தொகையிலான வழக்குகள் முற்றுப் பெறாமல் உள்ளன. அவற்றை நிறைவு செய்வதற்கான பல வழிமுறைகளை எதிர்காலத்தில் செயற்படுத்த உள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top