Headlines
Admin-message

சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - TNA

Published by tamilkurall on  | 


சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தேக நபர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுத்தல் மற்றும் சித்திரவதை செய்யப்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளது அறிக்கை கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் 16000 முதல் 22000 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சித்திரவதைகள் தொடர்பில் பொறுப்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top