Headlines
Admin-message

அரசாங்கத் தரப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!- கம்மன்பில எச்சரிக்கை

Published by tamilkurall on  | 


எமது அரசாங்க ஆட்சியில் தற்போதைய அரசாங்கத் தரப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தற்போது பத்திரிகைகளில் முழுப் பக்க விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.இந்த விளம்பரங்கள் அரசியல் ரீதியான விளம்பரங்களாகும்.
ராஜபக்சக்களின் மோசடியினால் வரி அறவீடு செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தும் தற்போதைய அரசாங்கம் பொதுமக்கள் பணத்தை விரயமாக்கி அரசியல் நோக்கங்களில் விளம்பரம் செய்து வருகின்றது.
எனவே, எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட உடனேயே இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் பணத்தில் அரசியல் ரீதியான விளம்பரங்களைச் செய்ய அதிகாரிகளுக்கோ அமைச்சர்களுக்கோ உரிமையில்லை.இவ்வாறு பொதுமக்கள் பணத்தைப் பயன்படுத்துவது லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
பொருளாதாரம் மீது புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றி, சவால்களுக்கு மத்தியில் கடுமையான போராட்டம், பாரிய கடன் சுமையிலிருந்து எதிர்கால சந்ததியினரை மீட்பதே எமது முயற்சி போன்ற விடயங்களின் அடிப்படையில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் தற்போதைய அரசாங்கம் விளம்பரம் செய்கின்றது.
இதற்காக பல கோடி ரூபா மக்களின் பணம் விரயமாக்கப்படுகின்றது.இந்த விளம்பரங்கள் மக்களை தெளிவுபடுத்துவதற்கு அன்றி எதிர்த்தரப்பினர் மீது அரசியல் ரீதியாக தாக்குவதற்கேயாகும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top