Headlines
Admin-message

வடக்கு மீனவர்களால் ஜனாதிபதிக்கு கடிதம்

Published by tamilkurall on  | 


இந்திய - இலங்கை கூட்டுப்படையினரின் கண்காணிப்புகள் உள்ளிட்ட 7 முக்கிய அம்சக்கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவுடன் மீன்பிடி சார்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வடக்கு மாகாண மீனவ சம்மேளனங்கள் இணைந்து ஜனாதிபதிக்கு மனு ஒன்றை கையளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ள நிலையில், இந்திய அரசாங்கத்திடம் தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட வேண்டும் என வலியுறுத்தியே இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே மீனவ சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் கருத்து வெளியிட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பில் புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ சம்மேளனத்தின் தலைவர் ஆலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top