Headlines
Admin-message

போலி ஆவணங்களின் ஊடாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது.

Published by tamilkurall on  | 


போலி ஆவணங்களின் ஊடாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவரை தாய்வான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

24 வயதான இலங்கையரிடமிருந்து போலி ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கனேடிய நிரந்தர வதிவிட அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், சுகாதார நலன்புரி அட்டை போன்றவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சிங்கப்பூர் வழியாக தாய்வான் ஊடாக ரொரன்டோ செல்ல முயற்சித்த போது குறித்த இலங்கையரை தாய்வான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் விசாரணை நடத்தி பின்னர் அவரை நாடு கடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 3700 அமெரிக்க டொலர் பணம் செலுத்தி சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல இவர் முயற்சித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top