பிரச்சினையொன்றுக்காக பொலிஸ் நிலையத்தை நாடிய 15 சிறுமி , அவரது தாய் மற்றும் 2 ஆண்களும் அனுராதபுரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி, இராணுத்திலிருந்து விலகிய 30 வயதான திருமணமான ஆணொருவடன் காதல் தொடர்பைப் பேணி வந்துள்ளார், மேலும் இருவரும் பாலியல் ரீதியான தொடர்பையும் பேணி வந்துள்ளனர்.
குறித்த நபர் அச்சிறுமியை, சட்டத்துக்கு ஏற்ற வகையில் 18 வயதானவுடன் திருமணம் செய்வதாக தெரிவித்து வந்துள்ளார்.
மேலும் பொருளாதாரத்துக்காக நகரில் உள்ள ஆடையகமொன்றில் பணியிலும் சேர்த்து விட்டுள்ளார். இந்நிலையில் அப்பெண் அங்கு கடைக்கு வந்த 26 வயது இராணுவ வீரருடன் காதல் தொடர்பொன்றை ஆரம்பித்து வந்துள்ளார்.
இவ்விடயம் முதல் காதலனுக்கு தெரியவரவே அவர் இது தொடர்பில் கலந்துரையாட அனைவரையும் அனுராதபுரத்துக்கு வரவழைத்துள்ளார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் தீர்வு எட்டப்பட முடியாமல் போகவே அனைவரும் பொலிஸினை நாடியுள்ளனர்.
இந்நிலையில் சிறுமி பராயமடையாதவர் என்ற உண்மை தெரியவரவே பொலிஸார் அனைவரையும் கைதுசெய்துள்ளனர். விரும்பி உறவு வைத்துக்கொண்டமை தொடர்பில் சிறுமி கைதாகியுள்ளார்,
பராயமடையாத சிறுமியை ஊக்குவித்தமைக்காக தாயும் , உறவு வைத்திருந்தமைக்காக ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
பராயமடையாத சிறுமியை ஊக்குவித்தமைக்காக தாயும் , உறவு வைத்திருந்தமைக்காக ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

