எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணை ஹோமாகம நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எக்னெலிகொட கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அக்கரைப்பற்று முகாமிற்கு வந்து சென்றவர்கள் பற்றிய விபரங்களை புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறு இராணுவத் தளபதிக்கு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் சரியான விபரங்களை அறிந்து கொள்ள புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் அவசியமானது.
இதேவேளை, விசாரணைகளுக்கு சில அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளார்.
சில அரச அதிகாரிகள் தங்களது கையொப்பத்தைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எக்னெலிகொடவை கடத்திய சந்தேக நபர்கள் மின்னேரிய எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெற்றுக்கொண்டமை பற்றிய விபரங்கள் இந்த விசாரணைகளுக்கு மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

