சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இது பற்றி கூறியுள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக பிணை முறிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுனராக பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பிணை முறி விநியோகத்தின் போது பாரியளவு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதமும் இதேவிதமாக மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு அமைய பிணை முறிகள் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே சில நிறுவனங்களுக்கு கசிவதானது மிகவும் பாரதூரமான ஓர் நிலையாகும்.
இது தொடர்பில் முழுமையான அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

