கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் தம்மை கடந்த வியாழக்கிழமையன்று கடத்திச் சென்று கடுமையாக தாக்கியதாக அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நிதிமோசடி விசாரணைகளுக்காக நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு முக்கியமான சாட்சியாக சரத் திஸாநாயக்க கருதப்படுகிறார்.
இந்தநிலையில் நிதிமோசடி விசாரணையின் சாட்சியாளர் ஒருவர் வரலாற்றில் முதல் தடவையாக தாக்கப்பட்ட முக்கியமான சம்பவம் இதுவாக கருதப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட வேளையில் 2014ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதிவரை அவரின் சாரதியான திஸாநாயக்க தனித்து 12400 மில்லியன் ரூபாவுக்கான காசோலைகளை பணமாக மாற்றியுள்ளார் என்று தரவுகள் காட்டுவதாக நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

