Headlines
Admin-message

வடக்கின் தீர்வு வரைபைக் கேட்கிறார் கிழக்கு ஆளுநர்!

Published by tamilkurall on  | 


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின்பெர்னாண்டோ, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்டம் கடந்த மாதம் 22 ஆம் திகதி சபையில்நிறைவேற்றப்பட்டிருந்தது. தீர்வுத் திட்டம், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டுஉத்தியோகபூர்வமாக வெளியிடப்படவிருந்தது.
இதற்கிடையில், கடந்த மாதம் 28ம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன், தீர்வுத் திட்டத்தை அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவரும்சபாநாயகருமான கரு ஜயசூரியவிடம் கையளித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில், கடந்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ,வடக்கு முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு, வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றைத் தனக்குத் தரமுடியுமா என்று கேட்டிருக்கின்றார் எனத்தகவல் கிடைத்துள்ளது.
எனினும், இதுவரை தீர்வுத் திட்டப் பிரதி, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின்பெர்னாண்டோவுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரியவருகின்றது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top