Headlines
Admin-message

தீர்வு வரைபுக்கான அமர்வின் அறிக்கை கோருகின்றார் வடக்கு ஆளுநர்!

Published by tamilkurall on  | 


வடக்கு மாகாண சபையால், அரசியல் தீர்வுத் திட்ட வரைபை நிறைவேற்றுவதற்கானஅமர்வுகள், கடந்த மாதம் இரண்டு தினங்கள் நடத்தப்பட்டன.
இந்த அமர்வுகளின்முழுமையான அறிக்கையை வழங்குமாறு, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே,பேரவைச் செயலகத்தைக் கோரியுள்ளதாக நம்பரகமாகத் தெரியவருகின்றது.
வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்டம், தென்பகுதியில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில், வடக்கு மாகாண ஆளுநர், இவ்வாறுஅமர்வு அறிக்கையைக் கோரியுள்ளார்.
வடக்கு மாகாண அரசின் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் அமர்வு, கடந்த மாதம் இரண்டுநாட்கள் நடைபெற்றது. கடந்த மாதம் 7ம் திகதியும், 22ம் திகதியும் இதுஇடம்பெற்றிருந்தது.
இதனைவிட கடந்த மாதம் 12ம் திகதி அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பிலான விசேட அமர்வு இடம்பெற இருந்தது.
இருப்பினும் அன்றைய தினம்அரசியல் தீர்வுத் திட்ட விடயங்கள் ஆராயப்படாமல் சாதாரண அமர்வாக அதுநடைபெற்றது.
இவ்வாறான நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கடந்த மாதம்இடம்பெற்ற அரசியல் தீர்வு தொடர்பான அமர்வின் அறிக்கைகளைக் கோரியுள்ளார்.
அறிக்கை கோரிய கடிதம், வடக்கு மாகாண பேரவைச் செயலகத்துக்கு கடந்த வாரம்அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் கடிதம் பேரவைச் செயலகத்தினால், வடக்குமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தால் ஆளுநருக்கு இதற்குரிய பதில் (அறிக்கை)இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top