Headlines
Admin-message

உரம் கொள்வனவு செய்ய அரசாங்கம் 450 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

Published by tamilkurall on  | 


விவசாயிகள் உரத்தை கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி வழங்கும் தேசிய வைபவம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறும்.
மா கந்துர விவசாய ஆராச்சி மத்திய நிலையத்தில் இந்த வைபவம் இடம்பெறும் என்று விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெரும்போகத்துக்காக தேவையான உரம் மற்றும் பசளையை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி உதவி அன்றைய தினம் விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்படும்.
இந்த திட்டத்துக்கென 450 கோடி ரூபாய் நிதி வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் கூடுதலான தொகை இலங்கை வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வங்கிக்கு 230 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மக்கள் வங்கிக்கு 205 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக விவசாயதுறை அமைச்சின் மேலதிக செயலாளாரும் உர விநியோக செயலகத்தின் பணிப்பாளருமான விஜித சந்திரபியதிலக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தகவல் தருகையில், 19 மாவட்டங்களில் விவசாயிகளின் கணக்குகளுக்கு வங்கிகள் மூலம் குறித்த பணத் தொகை வைப்பில் இடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், அம்பாறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் விவசாயிகளின் கணக்குகளுக்கு அடுத்துவரும் சில தினங்களில் பணம் வைப்பிலிடப்படும் என்று அவர் மேலும் கூறிப்பிட்டார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top